ஜானகிக்கு தூக்கம் கலைந்து விழிப்பு வந்தபோது.. காலைச் சூரியன் மேல வந்து கண்ணாடி ஜன்னல் வழியாக தன் ஒளிக்கற்றையை உள்ளே வீசிக் கொண்டிருந்தான்.
இமைகளை திறந்ததும்.. விழிகள் சூரிய ஒளியை உடனே ஏற்க முடியாமல்.. சிறிது எரிச்சலை கொடுத்தது. கண்களை சட்டென மூடி.. மெதுவாக திறந்தாள். இமைகளை மீண்டும் மீண்டும் மூடித் திறந்து பார்வையை சீராக்கினாள்.