“மேடம், இரவு டின்னருக்கு என்ன வேண்டும்” என்றான்.
“என்னப்பா, உள்ளது என்றேன்”
அவன் ஒரு மெனு கார்டை கொடுத்தான். நான் அவனிடம் என்ன வேண்டும் என பிறகு சொல்கிறேன் என்று கூறிவிட்டு ரூம் கதவை சாத்திவிட்டு அவன் கொண்டு வந்த மெனு கார்டை ஒரு நோட்டம் விட்டேன். அப்போதுதான் கவனித்தேன். அந்த மெனுகார்டுக்குள் ஒரு பேப்பர் இருந்தது. என்னவென்றால் இங்கே மசாஜ் பார்லர் உண்டு. லெவல் 2வில் உள்ளது. ஒரு நபருக்கு 40 நிமிடத்திற்கு — என்றிருந்தது. ரூமிற்கு வரவேண்டுமென்றால் ஒரு ரேட் போட்டிருந்தது. இது வரை எனக்கு அந்த அனுபவம் கிடையாது. ஆனால், எனக்கு இருந்த அசதிக்கு மசாஜ் தேவை என மனது சொல்லியது. கடைசியில் என் மனமே வென்றது. அதுவுமில்லாமல் ஒரு பெண்தானே எனக்கு மசாஜ் செய்யப்போகின்றாள் அதனால் ஒன்றும் தப்பில்லை என என் மனம் மீண்டும் சொல்லியதால், நான் ரூம் சர்விஸ் பெல்லை அமுக்கி எனக்கு செய்ய ஆள் வேண்டும் என்றேன். இன்னும் சிறிது நேரத்தில் அனுப்புகிறோம் என பதில் வந்தது. அடுத்த நாளும் ஏகப்பட்ட வேலை. இன்று மசாஜ் முடிந்தவிடன் நன்றாக தூங்கவேண்டும் என நினைத்துக்கொண்டே உடைகளை கலைந்து நைட்டிக்கு மாறினேன்.