பங்கஜம் வண்டியில் பெற்றோல் டாங்க் மொத்தமே 4 லிட்டர் தான்.
அதில் ஏற்கனவே 2 லிட்டர் பெற்றோல் இருந்ததால் மேலும் 1 லிட்டர் போட நினைத்தாள், அவள் வண்டி லிட்டருக்கு 50 கிலோ மீட்டர் போகும் என்பதால் திரும்பி வரும் போது கொஞ்சம் போடலாம் என்று நினைத்தாள்..
முதலில் அந்த பங்கிற்கு மணோ மற்றும் குஹன் வந்தார்கள்..
அங்கு சுமார் 25 மதிக்கதக்க, ஒல்லியான, கறுத்த பெண் பெற்றோல் நிரப்பிக்கொண்டிருந்தாள்..
அவள் முன் வண்டியை நிருத்தினார்கள்..
அவுட்டர் ஏரியா என்பதால் வேறு எந்த வண்டியும் இல்லை..
வண்டியை நிறுத்தியவர்கள், எதிரே இருந்த ஹோட்டலுக்கு சென்றனர்..
சாப்பிட, இருவருக்கும் பூரி செட் கட்ட சொல்லி காசு கொடுத்துக்கொண்டிருந்தனர்..
அப்போது பங்கஜம் அந்த பெற்றோல் பங்கிற்குள் நுலைந்தாள்..
ஆனால் பெற்றோல் போதும் இயந்தரத்தின் முன் மணோவின் வண்டி நின்ரதால் அதன் பின் தன் வண்டியை நிறுத்தி ஹார்ன் அடித்தாள்..
அதை குஹன் கவணித்தான்..
“மச்சி அந்த போலிஸ் அக்கா வந்துட்டாங்க டா, நீ இன்னைக்கு செத்த டா” என்றான்..
இதனை கேட்ட மணோ கொஞ்சம் பதறினான்..
பின் குஹனிடம் இருந்த தன் வண்டி சாவியை வாங்கினான்..
வேகமாக ஓடிவந்து தன் வண்டியை நெருங்கினான்..
“அக்கா, சாரி அக்கா, டீ சாப்பிட போனோம்” என்றவன் தன் வண்டியை நகர்த்தினான்..
மணோ மொத்தமே 55 கிலோ தான் இருப்பால்..
ஒல்லியான தேகம், மா நிறம்..
நல்லா முறுக்கேறிய உடல்..
லேசான தாடி, அரும்பும் மீசை இவையெல்லாம் அவனை சிறுவன் என காட்டியது, ஆனால் மணோவின் வயது 19..
“சரி தம்பி மெதுவா எடுப்பா, இல்ல பெற்றோல் போடுப்பா” என்றாள் பங்கஜம்ம்..
வேகமாக தன் வண்டி பெற்றோல் டாக் மூடியை கழற்றினான்..
“அக்கா, ரெண்டு லிட்டர் போடுங்க அக்கா” என்றான்..
அந்த ஒல்லியான பெண்ணையும் மணோ அக்கா என்றதும் அவன் மீது பங்கஜத்திற்கு நல்ல அபிப்ராயம் வந்தது..
அவள் உதடுகளில் வந்த புன்னகையை அடக்கினாள்..
“தம்பி பைக் புதுசா, எவ்வளவு தம்பி” என்று பங்கஜம் கேட்டாள்..
“70 ஆயிரம் அக்கா” என்றான் மணோ..
“ஓ.. என்று வியந்தால் பங்கஜம்..
அவனது ஜீன்ஸ் பேன்ட், சட்டை, ஷூ இவைகளை பார்க்கும் போது அவன் பணக்கார வீட்டுப்பையன் மாதிரி தோன்றியது..
அவன் பெற்றோல் போட்டு முடித்து கொஞ்சம் வண்டியை நகர்த்தினான்..
தன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்தான்..
அந்த பெண் சில்லரை எடுத்தாள்..
“அக்கா, வண்டி புது வண்டி, கொடைக்கானல் போவதால ஒன்னும் பிராப்லம் வராதுல என்று பெற்றோல் போடும் பெண்ணிடம் கேட்டான் மணோ..
“அப்போது அங்கு குஹன் வந்தான்..
“டேய், என் பைக்ல 3 டைம்ஸ் வந்துருக்கோம், டா, ஒன்னும் ஆகாதுடா” என்றான்..
“மச்சி உன்னது பழைய வண்டி, நல்லா செட் ஆகியிருக்கும், ஆனா என்னது” என்றான் மணோ..
அந்த பெற்றோல் போதும் பெண் மணோவை பார்த்தாள்..
“எனக்கு ஒன்னும் தெரியாதுங்க, மேனேஜர கேளுங்க என்றாள்..
மணோ தன் வண்டியை நகர்த்த, பங்கஜம் பெற்றோல் போட்டாள்..
“ஆஹா, இவர்களும் கொடைக்கானல் தான் வருகிறார்கள், பார்க்க நல்ல பையனாக தெரிகிறார்கள், இவர்களுடன் செல்லலாமா என்று யோசித்தாள்..
ஆனால் அங்கு நிற்காமல் தன் வண்டியை எடுத்தாள்..
வண்டியை எடுக்கும் போது மணோவை பார்த்தாள்..
அவன் சீரியசாக தன் வண்டியை பற்றி இன்னொருவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க, பங்கஜம் கிளம்பினாள்..
அவள் மனம் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது..
ஆம்.. இன்னும் சில நிமிடங்களில் மலைச்சாலை ஆரம்பமாகிவிடும்.. அவள் கண்ணெதிரே உயர்ந்த மலைச்சிகரங்கள் தெரிந்தன..
அவள் பின்னால் வந்த மணோவுக்காக கொஞ்சம் மெதுவாகவே சென்றாள்..