நண்பனுக்கும், தம்பிக்கும் முகம் வாடிப்போய் விட நான் நம்பிக்கையோடு, “டே சீட்டை தூக்குறோம். இன்னைக்கே பீஸை கட்டுறோம். பார்ட்டிய என்ஜாய் பண்றோம்” என்று அவர்களை உற்சாகப்படுத்த சொன்னபோது அவர்களும் என்னை குழப்பத்தோடு பார்த்தார்கள். அவர்களுக்கு புரிந்து போனது. சமாதானப்படுத்த ஏதோ பஞ்ச் டயலாக் பேசி சாந்தப்படுக்கிறான் என்று.