”உன்ன ஒன்னு கேக்கனும். .”
” என்னடி..?”
”மறைக்காம பதில் சொல்லு.. ராசுவ நீ லவ் பணாறதான..?”
கோமளா திகைத்த மாதிரி பார்த்து.. ”ராசு என்ன சின்னப் பையனா.? நம்ம வயசுப் புள்ளைகள.. லவ் பண்றதுக்கு..” எனத் திருப்பிக் கேட்டாள்.
”அதவிடு.. அவன்மேல ஆசதான உனக்கு. .? அதச் சொல்லு மொத..?” எனக் கேட்டாள் பாக்யா.
கோமளா மெல்லிய குரலில் ”நான் அசப்பட்டு என்ன பண்றது..? அவனெல்லாம் போயி… என்னை லவ் பண்ணுவானா..?” என்றாள்.
”ஏன்டீ..?”
” அவன் கலரு என்ன…? என் கலரு என்ன. ..? ஆளும் சூப்பரா இருக்கான்..! அவங்க ஊர்ல அவன கரெக்ட் பண்ண இனி எத்தனை பேர் போட்டி போடறாங்களோ… யாரு கண்டா…”
” அடிப்பாவி…”