- 60,654
- 37,593
- 173
காரணம் அங்கே அம்மா அந்த தகர கதவின் ஓட்டையில் அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள். அம்மா அவனை விட பெரியவள். அவனின் அம்சமான உடற்கட்டை பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டு இருந்தாள். கோபம் வரவில்லை….மாறாக சந்தோஷம்தான். காரணம் புரிய வில்லை. அதே போல ஆண் மார்பை பார்த்து நான் ஏன்? பெண்மை அங்கேதான் துவங்கியதோ? அதன் பிறகு சினிமா பாடல்களில் நான் நடிகைகளை விட்டு விட்டு ஹீரோக்களை ரசிக்க ஆரம்பித்தேன். பின் அந்த நடிகைகளை பார்த்து அவர்களை போலவே நடக்க பழகினேன்….சரோஜா தேவி படங்களாக பார்த்து அந்த ஒயிலான நடையை பழகி நான் நடந்தபோது என் மனதில் எவ்வளவு மகிழ்ச்சி! கை காசை சேர்த்து வைத்து அவ்வப்போது பவுடர், கண் மை என்று வாங்கும்போது…ஏதோ புதையல் கண்டது போல மகிழ்ச்சி! “அம்மா….நானும் உன் போல முடி வளர்கட்டுமாமா?” என்று ஒரு நாள் கேட்டபோது அம்மா புரியாமல் தலையாட்ட அடித்தது ஜாக்பாட்! மலையாள அம்மாவை போல நீண்ட முடி வளர்த்தேன். மெல்ல என் முடி என் பிட்டத்தை தொட்டது! யாராவது கேட்டால் “திருப்பதிக்கு நேர்த்தி கடன்” என்று சொல்லி தப்பித்து விடுவேன். சட்! ஒரு தடவை அம்மாவிடம் கையும் களவுமாக பிடிபட்டேன்….! அம்மா புடவையை கட்டி இருக்கும்போது அம்மா பார்த்து விட்டாள். அவள் முகத்தில் சோகம், வருத்தம்..! புரிந்துக்கொண்டு இருப்பாள்….ஆனால் அதன் பிறகு நானும் அவளும் இதை பற்றி பேசவேயில்லை! பல நாள் ஆசைகள் மகேஷை பார்த்ததும் மீண்டும் கரை புரண்டு வந்தது….! அதுவும் இன்று அந்த உரையாடல்கள்…மகேஷ்! மகேஷ் கொடுத்த அட்ரஸை பார்த்தேன்….எனக்கு தெரிந்த இடம்தான்! மறுநாள் காலை….! மணி 5.00 மணிக்கு எல்லாம் எழுந்து விட்டேன். குடிசைக்கு உள்ளே பார்த்தால் அம்மா தூங்கிக்கொண்டு இருப்பது தெரிந்தது. எழுந்து சைக்கிளை எடுத்து மகேஷ் வீட்டுக்கு மிதிக்க ஆரம்பித்தேன்….! முதல் முறையாக அவன் வீட்டிற்கு போகப்போறேன்…! வெட்கமாக இருந்தது.