பாட்டி அருகில் இல்லாத ஒரு சமயம் கேட்டான் ராசு.
”உன்னப் பத்தி ஒரு விசயம் கேள்விப் பட்டேனே..?”
” என்ன. .?”
அவள் கண்களைப் பார்த்தவாறு ”நீ லவ்வெல்லாம் பண்றியாமே..?”
‘ திக் ‘ கென்றது. சட்டென ஒரு பயம் அவள் மனதைக்கவ்வியது.
” நானா…? யாரு சொன்னா..?” அவளது பெரியம்மா பெண் கோமளா சொல்லியிருப்பாளோ.?
” யரோ சொன்னாங்க..” என தீர்க்கமாகப் பார்த்தான்.”உண்மையா..?”
என்ன சொல்வது..?
உடனே சமாளித்தாள்.!