” பாக்கனும்னு தோணலியா..?”
” அவன நெனச்சாலே கசப்பாருக்கு.. நான் சாகறவரை அவன பாக்கவே கூடாது. இது ஒன்னுதான் என்னோட ஒரே வேண்டுதல்..” என வேதனையோடு சொன்னாள்.
பாக்யாவின் பெற்றோர்.. அதிகாலை நாலுமணிக்கெல்லாம் செங்கல் அறுக்கும் வேலையை ஆரம்பித்துவிடுவர்.
சமையல் வேலையை முடித்து வைத்துவிட்டுப் போய்விடுவாள்.. பாக்யாவின் அம்மா.
மதியம் இரண்டு மணிக்கெல்லாம் அவர்கள் வேலை முடிந்து விடும்… மாலை நேரமானால்.. அவளது அப்பா… ‘ குடி ‘க்கக் கிளம்பிவிடுவார்.